53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மத்திய பல்கலைக்கழக முதுகலை மற்றும் இளங்கலை!.. அடுத்த ஆண்டுக்கான கியூட் நுழைவு தேர்வு தேதிகள் அறிவிப்பு...!!
இளங்கலை படிப்பிற்கான கியூட் தேர்வு தேதியை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. ஜூலை மாதத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க நாடு முழுவதும் இருக்கும் மத்திய பல்கலை கழகங்களில் பொது நுழைவு தேர்வு எனப்படும் கியூட் தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.
இந்நிலையில், பல்கலைக்கழக மானிய குழு, அடுத்த வருடத்திற்கான இளங்கலை படிப்புக்கான கியூட் நுழைவு தேர்வு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் வருடம் கியூட் இளங்கலை தேர்வுகள், மே மாதம் 21-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.
மேலும் முதுநிலைக்கான கியூட் தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்துக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.