மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ தெரிஞ்சுருச்சா... திடீரென வந்த சந்தேகத்தால் மனைவி கணவனுக்கு செய்த கொடூரம்...
பீகார் மாநிலத்தில் கோபால்பூர் மாவட்டத்தில் நவ் கட்சியா பகுதியைச் சேர்ந்தவர் பப்பு குப்தா - ப்ரீத்தி குப்தா தம்பதியினர். இவர்களுடன் பப்பு குட்டியின் தம்பியும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஒரே வீட்டில் வசித்து வந்ததால் கணவரின் சகோதரருடன் ப்ரீத்தி குப்தாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து ப்ரீத்தி குப்தா கணவர் வேலைக்கு சென்ற பிறகு கெழுந்தனுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் தனது கணவருக்கு தெரிந்து விட்டதோ என்ற சந்தேகம் ப்ரீத்தி குப்தாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
எனவே கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்து 20ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து தன் கணவரை தீர்த்து விடும்படி கூலிப்படை கும்பலிடம் சொல்லி இருக்கிறார் . அதன்படி வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பப்பு குப்தாவை வழிமறித்த கூலிப்படை கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் போலீசாருக்கு ப்ரீத்தி குப்தா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் உண்மையை கூறியுள்ளார் ப்ரீத்தி. அதனையடுத்து போலீசார் ப்ரீத்தி மற்றும் பப்பு சகோதரன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.