பரபரப்பு... பெங்களூரில் முஸ்லிம் நடத்துனரின் குல்லாவை அகற்ற வைத்த பெண்... வைரலாகும் வீடியோ.!
பெங்களூர் மாநகர பேருந்தில் தொப்பி அணிந்து பணியில் இருந்த முஸ்லிம் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின் ஒருவர் வலுக்கட்டாயமாக அவரது தொப்பியை கழற்ற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பெங்களூரு மாநகர அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்து ஒன்றில் நடத்துனூராக பணியாற்றும் முஸ்லிம் நபர் தலையில் தொப்பி அணிந்திருக்கிறார். அந்த பேருந்தில் பயணிக்கும் பின் ஒருவர் அந்த நபரிடம் "எதற்காக தொப்பி அணிந்து இருக்கிறீர்கள்? பணியில் இருக்கும் போது தொப்பி அணியலாமா? இது உங்கள் சீருடை விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?என கேட்கிறார்,
அதற்கு பதில் அளித்த அந்த நபர்" நான் நீண்ட நாட்களாக தொப்பி அணிந்து வருகிறேன். பணி நேரத்தில் இதனை அணியலாம் என்று கருதுகிறேன்" என்று பதில் அளிக்கிறார், இதற்கு அந்தப் பெண் "உங்கள் மதம் சார்ந்த விஷயங்களை வீட்டிலும் மசூதியிலும் வைத்துக் கொள்ளுங்கள் பணியின் போது இதுபோன்று செய்யாதீர்கள். நான் உங்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவிக்கிறேன்"என கூறுகிறார். அதற்கு பதில் அளித்த அந்த நடத்துனர் "நான் தொப்பி அணிந்ததற்கு இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நானும் எனது அதிகாரிகளிடம் இது குறித்து கேட்கிறேன்" என பதிலளிக்கிறார். அப்போது மீண்டும் குறிப்பிட்ட அந்தப் பெண் " விதிமுறைகளில் இல்லை என்றால் தொப்பியை கழட்டி விடுங்கள் என கூறுகிறார். அதன் பிறகு அந்த நடத்துணரும் தனது தொப்பியை கழட்டி விட்டார்.
ವಾಟ್ಸಾಪಲ್ಲಿ ನೋಡ್ದೆ. ಆ ಮಹಿಳೆಯ ಹೃದಯದಲ್ಲಿ ತುಂಬಿದ ಕೋಮು ವಿಷದ ತೀವ್ರತೆಯನ್ನು ಅಳೆಯುವ ಯಂತ್ರವೊಂದಿದ್ರೆ ಅದರ ಮುಳ್ಳುಗಳೇ ಒಡೆದುಹೋಗುತ್ತಿದ್ವೆನೋ?. ಕುಂಕುಮ, ಮಾಲೆಗಳನ್ನು ಧರಿಸುವಂತೆ ಟೋಪಿಗೂ ಅವಕಾಶವಿದೆಎಂದಾಗಿದೆ ನನ್ನ ಭಾವನೆ. ಏನಿದ್ದರೂ ವಿಷ ಕಾರುತ್ತಿರುವ ಮಹಿಳೆಯ ಮುಂದೆಯೂ ಸೌಮ್ಯವಾಗಿ ನಡೆದುಕೊಂಡ ನಿರ್ವಾಹಕರಿಗೆ ನನ್ನದೊಂದು ಸಲಾಂ pic.twitter.com/RFaIXGuq3M
— Mohamed Haneef (@Mohamed47623244) July 11, 2023
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். இந்த வீடியோ தொடர்பாக பலரும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் பேருந்தின் எண் மற்றும் எந்த ரூட்டில் பயணிக்கிறது என்பது தொடர்பாக பெங்களூர் போக்குவரத்து கழகத்திடம் கேட்டிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.