குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பூமியை நோக்கி வரும் கோள். ஏப்ரல் 29 ஆம் தேதி உலகம் அழிய போகுது..! இணையத்தில் வைரலாக பரவும் தகவல்..!
வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி இந்த உலகம் அழியப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஓன்று வைரலாகிவருகிறது. இமயமலை அளவுக்கு ஈடாக இருக்கும் அந்த சிறு கோள் பூமி மீது மோத இருப்பதாகவும், ஏப்ரல் 29ம் தேதி இந்த கோள் பூமி மீது மோதும் என்றும், இது தொடர்பான சிறிய வீடியோ ஒன்றும் அந்த வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ளது.
கோள் ஓன்று பூமி அருகே வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி வர இருப்பதாக நாசா ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த சிறு கோளுக்கு (52768) 1998 OR2 என நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த சிறு கோளானது பூமியில் இருந்து நிலா இருக்கும் தூரத்தை விட 16 மடங்கு தொலைவிலையே பூமியை கடக்கும் என்றும், ஒருவேளை மற்ற கோள்களின் ஈர்ப்பால் அந்த சிறுகோளின் திசை மாற வாய்ப்புள்ளதாகவும், ஆனால் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்ட வாய்ப்பு இல்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது.
அந்த சிறுகோளால் பூமிக்கு என வித பாதிப்பும் இல்லை எனவும், அதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நாசா கூறியுள்ளது. எனவே, இதை காரணமாக கொண்டு தேவை இல்லாத வதந்திகளை பரப்பவேண்டாம் எனவும் நாசா கூறியுள்ளது.