திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நம்மை வாழ விட மாட்டார்கள்.. இறப்பிலாவது ஒன்று சேர்வோம்.. விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகள்.. பரபரப்பு சம்பவம்.!
கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் சித்தாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஆகாஷ். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரமானது பெற்றோர்களுக்கு தெரியவரவே தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்து போன காதலர்கள் நம்மை ஒன்றாக வாழ விட மாட்டார்கள் சாவிலா தீவது ஒன்று சேர்வோம் என்று இருவரும் முடிவு எடுத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அப்போது விஷம் அருந்திய ஆகாஷ் உயிர்பயதில் தனது தாயாரை தொடர்பு கொண்டு காதலியோடு சேர்ந்து விஷம் குடித்ததாக கூறிவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காதலர்கள் இருவரும் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அந்த இளம் காதல் ஜோடிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம் காதல் ஜோடிகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,