மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி பேருந்தின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த 3 ஆம் வகுப்பு மாணவன்.! துடி துடிக்க நடந்த துயரச்சம்பவம்.!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திலுள்ள மோடி நகரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளி பேருந்தில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான். அப்போது, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அந்த மாணவன், ஜன்னலின் வெளியே எட்டிப்பார்த்துள்ளான்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக இருந்த மின்கம்பத்தில் சிறுவனின் தலை பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பள்ளி பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுனர் மற்றும் உதவியாளரை கைது செய்தனர். இந்தநிலையில், மாணவனின் இறப்புக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.