மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம்பெண், ஆளும் கட்சி எம்எல்ஏ மீது பரபரப்பு பாலியல் புகார்; வேறு வழியின்றி எம்எல்ஏ எடுத்த அதிரடி முடிவு.!
திரிபுரா மாநிலத்தில் பாஜக தலைமையில், திரிபுரா மக்கள் முன்னணி கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுரா மக்கள் முன்னணி கட்சி ரைமா பள்ளத்தாக்கு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் 28 வயதான தனஞ்ஜய். இவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்து விட்டார் என கடந்த 20ஆம் தேதி அகார்தலா மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார்.
இதனால் ஆளுங்கட்சி மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் கைது நடவடிக்கைக்கு பயந்து எம்எல்ஏ தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ சார்பாக திரிபுரா உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் வேறு வழியின்றி எம்எல்ஏ புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது மணப்பெண் தலாய் மாவட்டத்தில் உள்ள கண்டசெரா பகுதியில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இன்று திருமணத்தை பதிவு செய்து அதற்கான ஆவணங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.