மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: திருமாவளவன், கார்த்திக் சிதம்பரம், ஜெகத்ரட்சகன் உட்பட 49 எம்.பிக்கள் சஸ்பெண்ட்..!
கடந்த டிசம்பர் 13 நன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது, நாடாளுமன்ட்ட்ற அவையில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்தவர்கள் பாதுகாப்புகளை மீறி எம்.பிக்கள் அவைக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் தற்போது வரை 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பான விஷயத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டிருந்தன.
இதற்கு மத்திய அரசு மௌனம் காத்து வரும் நிலையில், அமளிகள் தொடருவதால் அவ்வப்போது எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று மொத்தமாக 49 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மொத்தமாக பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய 100 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்று திருமாவளவன், கார்த்திக் சிதம்பரம், ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார், பரூக் அப்துல்லா, சுப்ரியா சுலே, மணீஷ் திவாரி, சசி தரூர் உட்பட 49 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.