மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில பயங்கரம்; சூடான கஞ்சியை ஊற்றியதில் வார்டு உறுப்பினர் படுகாயம்.!
2024 மக்களை பொதுத்தேர்தலில் பங்கேற்றுள்ள வேட்பாளர்கள் பலரும், வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்தியவர்களை வரவேற்கின்றனர். ஒருசில இடத்தில் வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், அட்டின்கள் பகுதியில் தேர்தல் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. அப்போது, அட்டின்கள் முடக்கல் பஞ்சாயத்து, 19வது வார்டு உறுப்பினர் பிஜு (வயது 53) மீது, சூடான கஞ்சி ஊற்றப்பட்டது.
இதனால் மார்பு மற்றும் வயிற்றில் படுகாயமடைந்த பிஜு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சஜி (வயது 46) என்ற நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.