#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடித்துவிட்டு தினமும் டார்ச்சர்.. கடப்பாரையால் ஒரே அடி.. கணவரை கொன்று தூக்கிய மனைவி.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அகரதிநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் காத்தராசு. இவர் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். காத்தராசுவின் மனைவி நீலாவதி.
மதுப்பழத்திற்கு அடிமையான காத்தராசு, எப்போதும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மதுபோதையில் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கடப்பாரையால் ஒரே அடி!
இதனிடையே, நேற்றும் வழக்கம்போல் காத்தராசு தகராறு செய்யவே, ஆத்திரமடைந்த நீலாவதி கடப்பாரையை எடுத்து கணவரை ஓங்கி அடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: காவேரி ஆற்றின் அழகை ரசிக்க வந்த கல்லூரி மாணவர் கொடூர கொலை; போதை கும்பல் வெறிச்செயல்.!
இந்த சம்பவத்தில் காத்தராசு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். அவரை கைது செய்த காவலர்கள், காத்தராசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனைக்கு மறுப்பு தெரிவித்த ஏசி மெக்கானிக் கொடூர கொலை; கஞ்சா வியாபாரி கும்பல் பகீர் செயல்.!