53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
இந்த தீபாவளிக்கு பட்டாசு விற்பனை, வெடிக்க தடை.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்.!
இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் இன்னும் குறையாமல் பரவி வருவதை அடுத்து எப்படி தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாட முடியும் என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதித்து அதிரடி அறிவிப்பை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிந்து செல்லவும், பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.