#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டிக்டாக் பிரியர்களுக்கு இனி ஜாலிதான்! தடையை நீக்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
சமீப காலமாக இளைஞர்கள் பெருமளவில் பயன்படுத்தி வந்த செயலி டிக்டாக். அதில் இளைஞர்கள, இளம்பெண்கள் என பலரும் தங்களது திறமையை சிறந்த அளவில் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனாலும் பலர் அதனை ஆபாசமாகவும், எல்லை மீறியதாகவும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் டிக் டாக் ஆப் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பலர் ஆதரவும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 10 மொழிகளில் வீடியோக்களை மதிப்பிடும் பணியை மதிப்பிடும் குழு செய்து வருகிறது என்று டிக்டாக் நிறுவனம் தெரிவித்திருந்தது.
மேலும், லட்சக்கணக்கான டிக்டாக் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடந்த ஜூலை மாதம் முதல் நடிவடிக்கை எடுத்துவருவதாகவும் இதுவரை சர்ச்சைக்குள்ளாகும் படி பதிவேற்றம் செய்யப்பட்ட 60 லட்சம் வீடியோக்களுக்கு மேல் நீக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.
மேலும் பெண்கள், சிறுவர்களை பாதிக்கும் வகையிலும் பாலியல், சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் வகையிலும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய மாட்டோம் என்றும் டிக்டாக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை மாற்றி, தடையை நிபந்தனைகளுடன் நீக்கி உத்தரவிட்டுள்ளது.