இதுவரை 60 லட்சம் டிக்டாக் வீடியோக்கள் அதிரடியாக நீக்கம்; வெளியான பரபரப்பு தகவல்.!
இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரிடத்திலும் பிரபலமாக இருப்பது இந்த டிக் டாக். சினிமா, சீரியல் என பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் கூட இந்த டிக் டாக் ஆப்பிற்கு அடிமையாகி உள்ளனர். புது புது விடீயோக்கள் போடுவது, ரசிகர்களை கவர்வது என நாளுக்கு நாள் புது புது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதுதொடர்பாக டிக்டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 10 மொழிகளில் வீடியோக்களை மதிப்பிடும் பணியை மதிப்பிடும் குழு செய்து வருகிறது.
லட்சக்கணக்கான டிக்டாக் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடந்த ஜூலை மாதம் முதல் நடிவடிக்கை எடுத்துவருவதாகவும் இதுவரை 60 லட்சம் வீடியோக்களுக்கு மேல் நீக்கப்பட்டுள்து என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இனி டிக்டாக்கில் புதிய கணக்கு தொடங்குவதற்கு 13 வயது நிறைந்து இருக்க வேண்டும் என்ற புதிய விதியையும் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெறப்படும் வயது உள்ளிட்ட தகவல்களையும் வெளியிடாமல் பாதுகாப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.