மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காட்டுக்குள் காதலியுடன் ஒதுங்கியவரை கபளீகரம் செய்து கொன்ற புலி.. அதிரவைக்கும் சம்பவம்.. கதறிய காதலி.!
காட்டிற்குள் தோழியுடன் சென்ற ஒருவரை புலி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டம் தேசாய்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் அஜித் நாகாடே (வயது 21). இவர் கடந்த 3ஆம் தேதி தனது தோழியுடன் மாலை இரு சக்கர வாகனத்தில் உசேகாவ் வனப்பகுதிக்கு சென்ற நிலையில், இருசக்கர வாகனத்தை வழியிலேயே நிறுத்திவிட்டு இருவரும் காட்டிற்குள் சென்றுள்ளனர்.
அப்போது அருகிலிருந்து ஏதோ சத்தம் கேட்ட நிலையில், திடீரென புதரில் பதுங்கி இருந்த ஒரு புலி அஜித் நாகாடே மீது பாய்ந்துள்ளது. அத்துடன் வெறித்தனமாக அவரை தாக்கி காட்டுக்குள் தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.
இதனை கண்ட அருகிலிருந்த தோழி உடனடியாக அங்கிருந்து தப்பி அருகாமையில் உள்ள கிராம மக்களிடம் தனது தோழனை புலி அடித்து இழுத்துச் சென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனால் பயந்து போன மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் அஜித் நாகாடேவை தேடியுள்ளனர். இருப்பினும் அவர் கிடைக்காததால் சிறிது தூரத்தில் சென்று தேடிய நிலையில், அவர் அங்கு சடலமாக கிடந்துள்ளார்.
இதனை கண்ட வனத்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தற்போது வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்று கூறி தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.