மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்கள் புதிதாக திருமணம் செய்யப் போகிறீர்களா? அப்போ இது உங்களுக்கு தான்...! திருப்பதியின் அசத்தல் அறிவிப்பு..!!
புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு திருப்பதி கோவிலின் தேவஸ்தானம் ஒரு புதிய தகவலை அறிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் திருமணம் செய்ய போகும் தம்பதிகள், ஒரு மாதம் முன்பாக அவர்களுடைய அழைப்பிதழ்களை திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் அவர்களின் திருமணத்தன்று திருப்பதி ஏழுமலையானின் தரிசனம் பெற்ற பிரசாதம் மற்றும் பிரசாதத்துடன் கூடிய சுபிக்ஷா மங்களம் தரக்கூடிய பொருட்களும் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் திருப்பதி ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை புதுமண தம்பதிகள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.