மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு..
+2 வகுப்பை முடிந்து மருத்துவராக ஆசைப்படும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வை எழுத வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டிற்கான நீட் தேர்வானது வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைப்பெற உள்ளது.
இந்நிலையில் தற்போது நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு தொடங்குவதற்கு முன்பும் தேர்வு நடந்து முடிந்த பின்பும் தேர்வு மையங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தேவைக்கு ஏற்ப, விண்ணப்பதாரர்களுக்கு முகக் கவசம், கையுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 13ம் தேதி, நாடு முழுவதும் மொத்தம் 3,843 மையங்களில் நடைபெறவுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.