மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெட்ரோல், டீசல் விலை அசூர வீழ்ச்சி: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்துள்ளதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், இரண்டு வாரங்களாக பெட்ரோல் டீசல் விலை குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல் 34 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 78.12 -ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைந்து ரூ. 74.13 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.