மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு குடும்பத்தையே கலைத்த 2 தக்காளி.!! கதறும் கணவர்.!!
இந்தியாவில் பெய்து வரும் பருவ மழை காரணமாக பல மாநிலங்களில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து வெளியேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்களும் விலை ஏற்றமடைந்துள்ளது.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில், கணவன் சமைக்கும்போது மனைவியிடம் கேட்காமல் இரண்டு தக்காளிகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த மனைவி, தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதனை தொடர்ந்து மனைவி கோபித்துக் கொண்டு எங்கோ சென்று விட்டார் என்றும், குழந்தைகளுடன் சென்ற மனைவியை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
#NewsUpdate | குடும்பத்தை இரண்டாக்கிய தக்காளி #NewsTamil24x7 | #MadhyaPradesh | #husbandandwifeFight | #TomatoPrice | #TomatoPriceHike pic.twitter.com/CG1JW7Cf3p
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) July 13, 2023