மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சோகம்... ஆசிரியர் செய்த கொடுமை... தற்கொலை செய்து கொண்ட 16 வயது மாணவி.!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஆசிரியர் கொடுமை தாங்க முடியாமல் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஆசிரியர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
பெங்களூர் ரூரல் மாவட்டம் பார்வதிபுராவில் உள்ள பள்ளியில் சாரா என்ற மாணவி படித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி பள்ளி சென்று வந்த அவர் தனது வீட்டிற்குள் சென்று அறையை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு பார்த்தபோது சிறுமி மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை வீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து பேசிய சிறுமியின் பெற்றோர் அவரது இரண்டு ஆசிரியர்கள் தான் சிறுமியின் தற்கொலைக்கு காரணம் என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். நளினா மற்றும் கமர் தாஜ் என்ற இரண்டு ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொண்ட மாணவியை வகுப்பறையில் வைத்து 100 தோப்புக்கரணம் போட சொல்லி இருக்கின்றனர். இதுதான் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 16 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.