மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடிய சோகம்... தந்தையின் செயலால்... கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற எதிர்பாராத சம்பவத்தில் தந்தையின் கண் முன்னே மகன் சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த நாசர் மற்றும் ஜுபைரியா தம்பதியினரின் மகன் முகமது ஜுபைர் 9), அங்குள்ள வித்யா மித்ரம் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டிற்கு முன் அடர்ந்து வளர்ந்த மரங்களை நாசர் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அவரது மகனை கவனிக்கவில்லை. இதன் காரணமாக மரம் சரிந்து முகமது ஜுபைர் மீது விழுந்தது.
இந்த எதிர்பாராத சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவனை உடனடியாக கண்ணூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.