ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நள்ளிரவில் நிலாவைப் பார்க்க ஆசைப்பட்ட இரட்டை சிறுவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! துடிதுடித்து கதறிய பெற்றோர்!!
உத்தரப்பிரதேசத்தில் நிலாவைப் பார்க்க ஆசைப்படுவதாக கூறி சென்ற இரட்டை சிறுவர்கள் 25வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சென்னையை சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு 14 வயதில் 9 வது படிக்கும் சத்யநாராயணன் மற்றும் சூரியநாராயணன் என்ற இரட்டை சிறுவர்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் அந்த இரட்டை சிறுவர்கள் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் குடியிருப்பின் 25வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர்களின் தாயாரிடம் விசாரித்ததில், சிறுவர்கள் இருவரும் நிலாவைப் பார்க்க ஆசைப்பட்டதாகவும், அப்பொழுது கால் தவறி மாடியிலிருந்து விழுந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.