திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தந்தை வேலை செய்யும் தொழிற்சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவர்கள்... காவல்துறை விசாரணையில் அம்பலமான உண்மை!
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இரண்டு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளியாகி உள்ளது.
டெல்லி ஜாமியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பல்வீர். இவருக்கு திருமணம் ஆகி ஐந்து மற்றும் ஏழு வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். இவர் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி மதிய உணவு சாப்பிட்டுவிட்டு விளையாட சென்ற அவரது மகன்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் சிறுவர்களை தேடி இருக்கின்றனர் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததால் இது தொடர்பாக ஜாமியா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினரும் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வேலை செய்து வந்த தொழிற்சாலையின் மரப்பெட்டியில் இருந்து இரண்டு சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.
உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் இது சம்பவம் தொடர்பாக தீவிரமான விசாரணையில் ஈடுபட்டனர். சிறுவர்கள் மூச்சு திணறி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை வந்திருக்கிறது. மேலும் சிறுவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் தவறுதலாக மரப்பெட்டிக்குள் சென்று சிக்கி இருக்கலாம் என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.