மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாக்பூரில் திடீர் தாக்குதல்... பரிதாபமாக பலியான தமிழர்கள்.!! கொடூர சம்பவம்.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் தாக்கியதில் 2 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரயில் நிலையத்தில் தாக்குதல்
நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது கையில் கட்டையுடன் ரயில் நிலையத்திற்கு வந்த ஒரு நபர் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகளை சராமாறியாக தாக்கத் தொடங்கினார். இந்தத் திடீர் தாக்குதலில் 2 தமிழர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பரிதாபமாக பலியான தமிழர்கள்
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காயமடைந்த மற்ற 2 நபர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அசடுவழியும் ஆண்களே டார்கெட்.. நிர்வாண படமெடுத்து பணம்பறித்த 27 வயது பெண் கைது.!
மனநலம் பாதிக்கப்பட்ட நபர்
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காவல்துறையினர் அந்த நபரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் 2 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ஆண் நண்பர் முன் நடந்த கொடூரம்... 21 வயது இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.!!