53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அசடுவழியும் ஆண்களே டார்கெட்.. நிர்வாண படமெடுத்து பணம்பறித்த 27 வயது பெண் கைது.!
சல்லாப எண்ணத்துடன் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து, நிர்வாணா படமெடுத்து மிரட்டிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை போன்ற மாநிலங்களில் நெட்ஒர்க் அமைத்து, பெண்களை தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், வங்கிக்கணக்கில் அதிக பணம் வைத்துள்ளர்களிடம் நெருங்கிப்பழக்கவிட்டு ஹனி டிராப் முறையில் பணம் பறிக்கும் செயல்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகம் நடைபெற்று வந்தன.
இதையும் படிங்க: பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து; 8 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!
இந்த விசயம் குறித்து எழுந்த தொடர் புகாரின் பேரில், இந்த சர்ச்சை செயலில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது. இதனிடையே, தற்போது ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஹனி ட்ராப் சம்பவங்கள் நடக்க தொடங்கி இருக்கின்றன.
27 வயது இளம்பெண் கைது
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் வசித்து வரும் 27 வயதுடைய இளம்பெண், ஹனி டிராப் முறையில் பல நகர்களை ஏமாற்றி இருக்கிறார். செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் போன்றோரை குறிவைத்து, அவர்களிடம் பழகி, பின் தனியாக வரவழைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்து பணம் பறித்து வந்துள்ளார்.
சல்லாப எண்ணத்தில் பெண்ணிடம் சிக்கியவர்கள் மானத்தால் பணத்தை பறிக்கொடுத்து தவித்த நிலையில், சமீபத்தில் பெண்ணால் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய விசாகப்பட்டினம் காவல் துறையினர், பெண்ணை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மலைப்பாதையில் நடந்த சோகம்; கார் மீது லாரி சாய்ந்து, 4 பேர் பலி.!