திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொரோனாவை தடுக்க இரண்டு சிறுமிகள் செய்த செயல்! பாராட்டித்தள்ளும் பொதுமக்கள்!
உண்டியலில் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை புதுச்சேரி முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
சீனாவின் உகான் நகரில் தொடங்கியகொரோனா வைரஸ் தொற்றால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1லட்சத்தை கடந்துவிட்டது.கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் பரவியது. பிரதமர் மோடி சரியான நேரத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கை அமல்படுத்தினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல பிரபலங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு நிவாரண உதவியை செய்து வருகின்றனர். இந்தநிலையில், கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக தனிக் கணக்கை தொடங்கி புதுச்சேரி அரசு நிதி திரட்டி வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி சாரம் சக்தி நகரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் கவிப்பிரியா, மோகனப்பிரியா ஆகிய இருவரும் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு செய்து, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அளித்தனா். இவா்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா். இந்த இரண்டு சிறுமிகளின் செயல்களுக்கு ஒட்டுமொத்த மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.