திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BigNews: UGC ட்விட்டர் கணக்கை கைவைத்த ஹேக்கர்கள்.. கிரிப்டோ கரன்சி ஆதரவு பதிவிட்டு முடக்கம்.!
மத்திய உயர்கல்வித்துறையின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக்கிங் செய்துள்ளனர்.
கடந்த 1956 ஆம் வருடம் இந்தியாவில் உயர்கல்விக்கென தனி துறை அமைக்கப்பட்டு, அந்த துறை உயர்நிலைகல்விகள் தொடர்பான பணிகளை செய்து வருகிறது. இந்த UGC-யின் ட்விட்டர் கணக்கு தற்போது மர்ம நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, அதற்கு ஆதரவாக செயல்படக்கூறி பல்வேறு சமூக வலைதள கணக்குகள் மர்ம நபர்களால் முடக்கம் செய்யப்பட்டு, கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவான பதிவுகள் இடப்படுகின்றன.
UGC India's official Twitter account hacked. pic.twitter.com/t37ui8KNuC
— ANI (@ANI) April 9, 2022
இந்த நிலையில், தற்போது மத்திய உயர்கல்வித்துறையின் ட்விட்டர் கணக்கையும் ஹேக்கிங் செய்த மர்ம நபர்கள், கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவான தகவலை பதிவிட்டுள்ளனர். அந்த கணக்கை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.