மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உறவினர் பெண்ணுடன் ஓட்டம்; காவல்துறை விசாரணைக்கு பயந்து அண்ணன்-தம்பி தூக்கிட்டு தற்கொலை?.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சிங். இவர் உறவினர் பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது காதலியுடன் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர், அங்குள்ள ஹத்ராஸ் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சஞ்சய் சிங்கை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: ஸ்னாப்சாட் டவுன்லோட் செய்ய தந்தை எதிர்ப்பு; தூக்கில் பிணமாக தொங்கிய 16 வயது சிறுமி.!
சகோதரர்கள் அடுத்தடுத்து பலி
விசாரணைக்கு பின்னர் வீட்டிற்கு வந்த சஞ்சய் சிங்கை, மீண்டும் அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துள்ளனர். இதனால் மனமுடைந்துபோன சஞ்சய் சிங், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரின் உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலை சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், சஞ்சயின் சகோதரர் பிரமோத் குமார் என்பவரும் வீட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் முதலீடு இழப்பு; கல்லூரி மனைவி கடிதம் எழுதிவைத்து தற்கொலை.!