மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பச்ச மண்ணுடா.. லேப்டாப் பைக்குள் 2 வயது பச்சிளம் குழந்தையின் உடல்.. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதா?.!!
மாயமானதாக கருதப்பட்ட குழந்தை பக்கத்து வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியைச் சார்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி மஞ்சு. தம்பதிகளுக்கு மான்சி என்ற இரண்டு வயது பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக பெற்றோர் வெளியே சென்று வந்த போது குழந்தை வீட்டில் இல்லாத நிலையில், அதிர்ச்சியடைந்து அவர்கள் குழந்தையை தேடியுள்ளனர்.
பின் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பக்கத்து வீட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தபோது லேப்டாப்பையில் குழந்தையின் உடல் எடுக்கப்பட்டது.
குழந்தையின் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதா? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சந்தேகத்திற்குரிய நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.