திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதல் சந்தேகத்தால் கணவனின் வெறிச்செயல்; மனைவியை குழந்தைகள் முன் அடித்துக்கொன்ற பயங்கரம்.!
உத்திரபிரதேசம் மாநிலம், காஜியாபாத், லோனி கிராமத்தை சேர்ந்தவர் அயூப். இவரின் மனைவி ஃபர்ஸானா. தம்பதிகளுக்கு மகன், மகள் என 4 குழந்தைகள் இருக்கின்றனர்.
சனிக்கிழமை இரவில் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த அயூப், மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். தந்தையை தடுக்க வந்த மகன், மகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள், ஃபர்ஸானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்ட கணவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவான அயூப்பை கைது செய்ய 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.