மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓட்டல் கடை உரிமையாளரின் 15 வயது மகன் கடத்திக்கொலை; கால்வாயில் மீட்கப்பட்ட சடலம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் செயல்பட்டு வரும் ஷிவா காபாவின் உரிமையாளர் கிருஷ்ண ஜீத். இவருக்கு 15 வயதுடைய குணால் என்ற மகன் இருக்கிறார்.
கடந்த மே 3 அன்று குணால் கார் ஒன்றில் கடத்தி செல்லப்பட்டார். மகனை கும்பல் ஒன்று கடத்தி சென்றதை உறுதி செய்த கிருஷ்ண ஜீத், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுவன் காரில் சென்றது உறுதி செய்யப்பட்டது.
சிறுவனை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரின் உடல் இன்று புலந்த்சஹாரில் உள்ள கால்வாயில் மீட்கப்பட்டது. சிறுவனை கடத்தி சென்றது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விஷயம் குற்றவாளிகளை கைது செய்ததும் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.