ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 8 வாகனங்கள்! இருவர் உயிரிழப்பு.. உ.பி யில் இன்று நடந்த சோகம்



up-hathras-8-car-accident-2-died

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து இன்று மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் உள்ள யமுனா விரைவுசாலையில் இன்று காலை 7:15 மணியளவில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்றாக அடுத்தடுத்து மோதியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தநிலையில் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

UP Hathrash accident

விபத்துக்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் போலீசார், அடர்பனி காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறியுள்னர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர். ஒரே நேரத்தில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.