சாப்பாடு தட்டை கையில் வைத்துக்கொண்டு கதறி அழுத காவலர்!! என்ன காரணம் தெரியுமா? வீடியோ இதோ..



UP police manoj kumar complaint about food viral vide

கையில் சாப்பாடு தட்டை வைத்துக்கொண்டு கதறி அழுத காவலர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் பிரோசாபாத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். காவல்துறையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக கூறிய மனோஜ்குமார் கையில் சாப்பாடு தட்டுடன், காவல் நிலையத்தில் இருந்து வெளிய வந்து கதறி அழுதுள்ளார்.

12 மணி நேரம் வரை வேலை வாங்குவதாகவும், ஆனால் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிருகங்களால் கூட உண்ண முடியாத அளவிற்கு தரமற்றதாக இருப்பதாக கூறி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் மனோஜ்குமார். அருகில் இருந்த காவலர்கள் அவரை சமாதானப்படுத்தியும் அவர் கேட்பதாக இல்லை

இந்நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் வைரலாகிவரும்நிலையில், உணவின் தரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உத்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.