#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜட்ஜ் ஐயா.. என் புருஷன் அந்த விஷயத்தை என்கிட்ட மறைச்சுட்டாரு.. விவாகரத்து கேட்ட இளம்பெண்..!!
வழுக்கை தலையை மறைத்து தன்னை திருமணம் செய்துகொண்ட கணவரை விவாகரத்து செய்துள்ளார் இளம் பெண்.
வளர்ந்துவரும் நாகரீக உலகில் கணவன் - மனைவி இடையே ஏற்படும் சிக்கல்கள், மோதல்கள், விவாகரத்து போன்று சம்பவங்களும் அதிகரித்துவருகிறது. சிறு சிறு விஷயங்களுக்கும் விவாகரத்து வரை செல்கின்றனர். அந்த வகையில், கணவனின் தலை வழுக்கையாக இருப்பதாக கூறி, அவரை விவாகரத்து செய்த்துள்ளார் உத்ரபிரதேசத்தை சேர்ந்த இளம் பெண்.
இந்த வழக்கு குறித்து அவர் கூறும்போது, தனக்கும் தன் கணவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் ஆனதாகவும், ஆனால் திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் தனது வழுக்கை தலையை மறைத்து கணவன் தன்னுடன் குடும்பம் நடத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதனால் தனது கணவருடன் தனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஆலோசனைக்குப் பிறகு தற்போது அந்தப் பெண்ணிற்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.