திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இன்டர்நெட், UPI PIN இல்லாமலே இனி பணம் அனுப்பலாம்: UPI Lite செயலியை அறிமுகம் செய்தது RBI..!
ரிசர்வ் வங்கி குறைந்த கட்டண பரிவர்த்தனைகள் யூபிஐ லைட் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த UPI Lite செயலி எளிமையாக வேலை செய்யும் என்றும், இதன் மூலமாக இணைய வசதி இல்லாமலேயே பயனர்கள் பணத்தை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சேவையால் அலுவலகம் இல்லாத நாட்கள், நெருக்கடியான சமயத்திலும் பணத்தை விரைந்து அனுப்பலாம்.
UPI செயலியை போல அல்லாது, நேரடியாக வங்கிக்கணக்கில் இருந்து இம்முறை மூலமாக பணம் அனுப்படுகிறது. UPI Lite என்பது வாலட் போன்றதாகும். பயனர்கள் வாலட்டில் பணத்தை இருப்பு வைத்து எப்போது வேண்டும் என்றாலும் உபயோகம் செய்யலாம். பணத்தை பெறுபவர் இணைய இணைப்பை வைத்திருந்தால், அவருக்கு பணம் அனுப்பி வைக்கப்படும். அனுப்புவருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை.
அதனைப்போல, UPI Lite-க்கு PIN தேவையில்லை. நேரடியாக அது பணத்தை அனுப்பும் வசதி கொண்டது. ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.200 அதிகபட்சமாக அனுப்பும் வகையில் அமைப்புகள் இருக்கும். அதிகபட்சமாக வாலட்டில் ரூ.2000 இருப்பு வைக்கலாம். இந்த செயலி அமைப்பு BHIM, UPI Lite போன்றவற்றிலும் கிடைக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., இந்தியன் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல், கோடக் மகேந்திரா போன்ற வங்கி பயனர்களுக்கு இச்சேவை கிடைக்கும்.