மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.37 கோடி காப்பீடு தொகை பெறுவதற்காக பாம்பை ஏவி கொலை.! சமையல்காரர் செய்த சதிவேலை.! வெளியான திடுக்கிடும் தகவல்கள்
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 54 வயதான முதியவர், பிரபாகர் பீமாஜி வாக்சௌரே. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்து சமையல்காரராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா திரும்பிய அவர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ராஜூர் கிராமத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், பீமாஜி இறந்துவிட்டதாக, அரசு மருத்துவமனையிலிருந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் காவல் துறையினர் சென்றனர். அப்போது, அங்கு வந்த அவரது உறவினர் பிரவீன் என்பவரும், அப்பகுதியை சேர்ந்த ஹர்சத் என்பவரும், இது பீமாஜி தான் என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும், உடற்கூராய்வில் பாம்பு கடி காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரியவந்ததால் இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் பிரவீனிடம் கொடுக்கப்பட்டது.
பீமாஜி இறப்பு குறித்து, அவர் காப்பீடு திட்டம் எடுத்திருந்த அமெரிக்காவை தளமாக கொண்ட நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, நிறுவனத்தின் ஊழியர் விசாரிப்பதற்காக மகாராஷ்டிராவுக்கு வந்துள்ளார். அப்போது, காவல் துறையினரிடம் இறப்பு குறித்து கூடுதல் தகவல்கள் தேவை என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வாக்செளரே வசித்த பகுதிக்கு காவல் துறையினர் சென்றனர். ஆனால், அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவமே தெரியவில்லை. ஆனால், அன்றைய தினம் ஆம்புலன்ஸ் வந்ததை பார்த்த்தாக தெரிவித்துள்ளனர். மேலும், உடலை உறுதிசெய்ய மருத்துவமனை வந்த ஹர்சத்தை காவல் துறையினர் தொடர்பு கொண்ட போது, அவர் பீமாஜி கொரோனாவால் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் குழப்பமடைந்த காவல் துறையினர், பீமாஜியின் தொலைப்பேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில், அவர் இறக்கவில்லை என்றும், மருத்துவமனைக்கு பிரவீன் என்ற பெயரில் வந்தவர் தான் பீமாஜி என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனடியாக நாடகம் ஆடிய கும்பலை போலீசார் கைது செய்தனர். பீமாஜி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காப்பீடு தொகை ரூ.37 கோடி பெறுவதற்காகச் சொந்த மரண நாடகத்தை நிகழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்தது.