மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலிரவன்று இளம் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை; கணவரும் உடந்தையான கொடூரம்.!
கேட்ட வரதட்சணை கொடுக்காததால் முதலிரவு அன்று கணவர் மற்றும் அவரது தம்பியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் மணப்பெண்.
உத்திரபிரதேசம் முசாபர் நகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடந்த 6 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நெருங்கிய நிலையில் ஏற்கனவே பேசி இருந்த வரதட்சணையை விட கூடுதலாக மாப்பிள்ளை வீட்டார் கேட்டுள்ளார்கள். எனினும் அவர்கள் கேட்ட அளவிற்கு சிறிது குறைவாக தான் பெண் வீட்டிலிருந்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது தம்பி இருவரும் சேர்ந்து முதல் இரவு அன்று அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காலையில் அந்தப் பெண் வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் அப்பெண்ணின் வீட்டார்கள் அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளார்கள்.
அங்கு இரத்தப்போக்குடன் மயங்கிய நிலையில் கிடந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அப்பெண்ணின் சகோதரர், அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது தம்பி ஆகிய இருவர் மீதும் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.