#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடுரோட்டில் இளம்பெண்ணை தரதரவென இழுத்துச்சென்று 4 பேர் கும்பல் கூட்டுபலாத்காரம்.. இளைஞர்கள் வெறிச்செயல்.!
ஆட்டோவில் சென்ற பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று, ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டம் தானேபூர் பகுதியில் 19 வயதுடைய ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனது உடல்நிலை சரியில்லாத தாயை பார்ப்பதற்காக, உறவினர் வீட்டிற்கு கடந்த 23ஆம் தேதி காலை சென்றுள்ளார்.
இதனையடுத்து இரவில் ஆட்டோ மூலமாக இவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், 10 மணியளவில் ஆட்டோவை 4 இளைஞர்கள் திடீரென வழிமறித்துள்ளனர்.
மேலும், ஆட்டோவில் சென்ற அந்த இளம்பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று, சாலையோரம் உள்ள ஒரு புதரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பி ஓடியுள்ளனர்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்துள்ளார். இதன்பிறகு அவரது உறவினர்கள் உடனடியாக அங்கு சென்று அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தானேபூர் காவல் நிலையத்தில் பெண் மற்றும் அவரது உறவினர்கள் புகார் அளித்ததையடுத்து, வழக்குப்பதிந்த காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்களை தேடி வருகின்றனர்.