திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: மாட்டுக்கு உணவளிக்க சென்ற சிறுமிக்கு உறவினரால் நடந்த கொடூரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பீஜினோர் மாவட்டதை சேர்ந்த சிறுமி, சம்பவத்தன்று தனது உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
சிறுமி தனது மாட்டுக்கொட்டாயில் மாடுகளுக்கு உணவளிக்கச்சென்றபோது, சிறுமியை நன்கு தெரிந்த உறவினரே இக்கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
குற்றத்தை இழைத்தவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட, சிறுமி மாட்டுக்கொட்டாயில் கதறி அழுதுள்ளார். அவரின் அழுகுரல் கேட்டு வந்த குடும்பத்தினர், விபரீதத்தை புரிந்துகொண்டுள்ளனர்.
பின் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற பீஜினோர் மாவட்ட ஏஎஸ்பி ராம் ஆராஜ், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து குற்றவாளியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.