மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது சிறுமியை குடோனுக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்த 19 வயது இளைஞர்; பேன்சி கடை உரிமையாளர் அதிர்ச்சி செயல்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதாகி மாவட்டத்தில் 14 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் ராஜு ஜெய்ஷ்வால் என்ற 19 வயதுடைய நபர், பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று சிறுமி ஜெய்ஷ்வால் கடைக்கு சென்றிருந்த நிலையில், அவர் கேட்ட பொருள் குடோனில் இருப்பதாகவும், தன்னுடன் வந்து நேரடியாக எடுத்து செல்லுமாறும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சிறுமி ஜெய்ஷ்வாலுடன் குடோனுக்கு சென்றபோது, அங்கு சிறுமியை கயவன் பலாத்காரம் செய்திருக்கிறான். வீட்டிற்கு சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ஜெய்ஷ்வாலை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.