மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 மனைவி கட்டியவருக்கு வந்த வினோத பிரச்சனை: 7 நாட்களில் 3+3, போனஸ் 1 என பங்கிட்டு கொடுத்த அதிகாரிகள்..!
முதல் மனைவிக்கு தெரியாமல் 2 திருமணம் செய்தவருக்கு 2 மனைவிகளும் அடித்துக்கொண்டு காரணத்தால், வாரத்தை கணக்கில் எடுத்து அதிகாரிகள் இருவருக்கும் சரிபாதியாய் பங்கிட்டு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியை சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனியே சென்றுள்ளார்.
அவ்வப்போது தனது மனைவியை நேரில் வந்து சந்தித்து சென்றதாக தெரியவருகிறது. இதற்கிடையே, அவருக்கு மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே, தனக்கு முதல் திருமணம் நடந்து குழந்தைகள் இருப்பதை மறைத்து அவரை திருமணம் செய்துகொண்டு வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, தனது கணவரின் முதல் திருமணம் தொடர்பாக இரண்டாவது மனைவிக்கு தகவல் தெரியவர, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் மூவரையும் அழைத்து விசாரித்ததில், கணவர் எனக்குதான் என இருவரும் சண்டையிட்டுள்ளனர்.
இதனால் மூவரையும் கவுன்சிலிங் அனுப்பிய காவல் துறையினர், பேசி முடிவெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, திங்கள் முதல் புதன் கிழமை வரை கணவர் முதல் மனைவியின் இல்லத்திலும், வியாழன் முதல் சனிக்கிழமை வரை இரண்டாவது மனைவியின் இல்லத்திலும் இருந்து குடும்பம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் கணவர் எந்த மனைவியோடு இருக்க விருப்பபடுகிறாரோ, அம்மனைவியுடன் இருந்துகொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விசயத்திற்கு மூவரும் ஒப்புக்கொள்ளதாக விருப்ப ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு கையெழுத்தும் வாங்கப்பட்டுள்ளது.