மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இருதரப்பு சண்டையில் 2 சிறுவர்கள் கோடரியால் வெட்டிக்கொலை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாடவுன் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் இருக்கின்றனர். வினோத் குமார் சிகை அலங்காரம் செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
இவரின் கடைக்கு எதிர்புறம், ஜாவேத் என்பவர் முடிதிருத்தம் வைத்து நடத்துகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரியவருகிறது. இதனால் அவ்வப்போது இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவவதன்று நடந்த தகராறில் ஆத்திரமடைந்த ஜாவேத், வினோத் குமாரின் கடைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த வினோத்தின் மகனை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வினோத் குமாரின் தரப்பினர், ஜாவேத்-க்கு எதிராக தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.