திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐயோ கலிகாலம்.. ஆபாச படம் பார்த்து 8 வயது சிறுமியை சீரழித்த 14 வயது சிறுவன்.. நெஞ்சை துடிதுடிக்கவைக்கும் சம்பவம்.!
தொழில்நுட்ப உலகில் அதனை நாம் எப்படி உபயோகம் செய்கிறோம் என்பதே நமது செயல்களை வழிவகை செய்யும். பிள்ளைகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டியதன் அவசியத்தில் இன்றைய இளம் தலைமுறை இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பலியா மாவட்டத்தைச் சார்ந்த 14 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டருகே 8 வயது சிறுமி ஒருவரும் வசித்து வந்த நிலையில், இருவரும் சிறார்கள் என்பதால் அவ்வப்போது ஒன்றாக விளையாடி மகிழ்ந்து வந்துள்ளனர்.
ஆபாச படம் பார்க்கும் பழக்கம் கொண்ட சிறுவன் சம்பவத்தன்று சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தனக்கு நடந்ததை கூறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 14 வயது சிறுவனை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில், சிறுவன் ஆபாச படங்களை பார்த்து எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் அம்பலமானது. விசாரணைக்கு பின் சிறுவன் சீர்தீருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.