மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கரம்: தாய், 3 குழந்தைகள் உடல் கருகி பலி.. கணவர் கண்முன் சோகம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள தியோரியா மாவட்டம், திமிரி கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர் குப்தா. இவரின் மனைவி ஆர்த்தி தேவி (வயது 42). தம்பதிகளுக்கு அனாசல் (14), சிருஷ்டி (11) என்ற 2 மகள்களும், குந்தன் (12) என்ற மகனும் இருக்கின்றனர்.
இன்று காலை 4 மணியளவில் சிவசங்கர் குப்தா வேலைக்கு செல்ல தயாராகி இருக்கிறார். அவரின் மனைவி ஆர்த்தி தேவி, கியாஸ் அடுப்பில் தேநீர் வைத்துக்கொண்டு இருந்தார். வாசலில் குப்தா காத்திருந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென கியாஸ் சிலிண்டர் பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆர்த்தி தேவி, வீட்டில் உறங்கிய குழந்தைகள் மூவர் என நால்வரும் பரிதாபமாக உயிர்ந்தனர். வீட்டின் வெளியே இருந்த சிவசங்கர் குப்தா மட்டும் உயிர்தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பால்வுனானி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தினர். பின் விபத்தில் உயிரிழந்த நால்வரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.