இசைக்கச்சேரி ஒலிப்பதில் தகராறு; பூசாரியை ஊரே சேர்ந்து அடித்துக்கொன்ற பயங்கரம்.! 



Uttar Pradesh Deoria Priest Killed by Local Villagers 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள தியோரியா, பரிபூர், சித்திபெத் பகுதியை சேர்ந்தவர் அசோக் சவுபேய். இவர் அவ்வூரில் புகழ்பெற்ற சாமியாராக இருந்து வருகிறார். 

சம்பவத்தன்று இவர் உள்ளூரில் இசைக்கச்சேரி நடந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஊர்மக்கள் மற்றும் அசோக் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. 

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் ஒன்று திரண்டு அசோக் மற்றும் அவரின் குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் அசோக் பரிதாபமாக உயிரிழந்தார். 

தாக்குதல் சம்பவத்திற்கு முன்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், அவர்கள் வருவதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அசோக்கின் குடும்பத்தினரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

மேலும், தாக்குதல் சம்பவத்தில் பலியான அசோக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், முக்கிய குற்றவாளியான ஹான்சலா பஸ்வான் என்பவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.