#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏன் அவன் கூட பேசுற? - 17 வயது மகளை கோடரியால் வெட்டிக்கொன்ற தந்தை.. உடந்தையாக 2 சகோதரர்கள்: கொடூர செயல்.!
17 வயதுடைய மகளை ஈவு இரக்கமின்றி பெற்றெடுத்த தந்தை, உடன் வளர்ந்த சகோதரர்களே கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கௌஷம்பி மாவட்டம், முஷாபர்பூர் கிராமம், சாராய் அகில் தெருவை சேர்ந்தவர் மன்ரகான் சிங். இவருக்கு ராதேஷ்யாம் சிங், கன்ஷ்யாம் சிங் என்ற 2 மகன்களும், 17 வயதுடைய பிரீத்தி என்ற மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில், பிரீத்தி அதே கிராமத்தை சேர்ந்த நபரொருவருடன் நட்பாக பழகி, எப்போதும் அவருடனே செல்போனில் பேசி மகிழ்ந்து வந்ததாக தெரியவருகிறது.
இதனை அறிந்த குடும்பத்தினர் பிரீத்தியை கண்டிக்க, அவர் குடும்பத்தினரை எதிர்த்து பேசியுள்ளார். இதனால் பிரீத்தியின் மீது ஆத்திரம் கொண்ட மன்ரகான் சிங், ராதே மற்றும் கன்ஷ்யாம் சிங் ஆகியோர் சேர்ந்து பிரீத்தியை கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பிரீத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து தந்தை, 2 மகன்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.