மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
LED டிவி வெடித்து சிதறி 16 வயது சிறுவன் பரிதாப பலி; தாய், நண்பர் படுகாயம்.. டிவி பார்த்துக்கொண்டு இருக்கும் போதே பயங்கரம்.. மக்களே உஷார்.!
வீட்டில் இருந்த LED டிவியை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அது வெடித்துசிதறிய சோகம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம், ஹர்ஷ் விஹார் பகுதியில் வசித்து வருபவர் நிரஞ்சன். இவரின் மனைவி ஓமாவதி. தம்பதிகளின் மகன் ஓமேந்திரா (வயது 16).
ஓமேந்திரா அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவரின் நண்பர் கரண். இந்நிலையில், இன்று ஒமேந்திரா தனது நண்பர் கரணுடன் சேர்ந்து, வீட்டில் இருந்த LED டிவியை பார்த்துக்கொண்டு இருந்துள்ளது.
ஓமாவதி வீட்டு வேலைகளை கவனித்து கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த LED டிவி வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஒமேந்திரா பரிதாபமாக உயிரிழந்தான்.
மேலும், ஓமவாதி, கரண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். வெடி சத்தம் கேட்டு அதிர்ந்துபோன அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் ஒமேந்திராவின் உயிரிழப்பை உறுதி செய்தனர்.
ஓமவாதி மற்றும் கரண் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.