திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதலியை கொலை செய்யச்சென்று ஆள்மாறி நடந்த சோகம்; 19 வயது இளம்பெண் பரிதாப பலி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி சம்பா தேவி. இவரின் முதல் கணவர் இறந்துவிட்டார். இரண்டாவது கணவர் பீகார் மாநிலத்தில் வசித்து வருகிறார். அவர் உடல்நலம் குன்றியவர் ஆவார்.
சம்பா தேவிக்கு 19 வயதுடைய ஜோதி என்ற மகள் இருக்கிறார். இவர் திருமணம் முடிந்து தனது கணவருடன் வசித்து வருகிறார். அவ்வப்போது தனது தாயின் வீட்டிற்கு வந்து அவரை பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று தாயின் வீட்டிற்கு மகள் வந்திருந்தார். அவரின் கணவரும் உடன் இருந்தார்.
காப்பாற்றும் முயற்சியில் நடந்த சோகம்:
அச்சமயம் வீட்டிற்கு வந்த பாபி என்ற நபர், சம்பா தேவியை கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சம்பாதேவியை காப்பாற்ற முயற்சித்து இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் ஜோதியின் மீது கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது.
இதனால் நிலைகுலைந்து சரிந்த பெண்ணை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிசெய்தபோது, அவரின் உயிர் பறிபோனது தெரியவந்தது. விசாரணையில், பாபிக்கும் - சம்பா தேவிக்கும் தொடர்பு இருந்தது உறுதியானது.
பொறாமையில் நடந்த பயங்கரம்:
இதனிடையே, தேவி வேறொரு இளைஞருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இதற்கிடையில், குற்றவழக்கில் தொடர்புடைய பாபி சிறைக்கு சென்ற நிலையில், தனது கள்ளக்காதலி வேறொருவருடன் காதல் வயப்பட்ட பொறாமை தாங்காமல் அவரை கொல்ல சென்று, தவறுதலாக அவரின் மகள் பலியானது நடந்துள்ளது.