மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமி காரில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்: குற்றவாளியை சுட்டுப்பிடித்த உ.பி காவல்துறை: அதிரடி நடவடிக்கை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி, சம்பவத்தன்று திருமண ஊர்வலத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது, அங்கு காரில் வந்த இருவர் கும்பல் சிறுமியை கடத்தி சென்றது.
ஓடும் காரிலேயே சிறுமி இருவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின் சிறுமியை காரில் இருந்து இறக்கிவிட்ட கும்பல், அங்கிருந்து தப்பிச்சென்றது.
வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கண்ணீருடன் விவரிக்க, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த ஜாகிர் (வயது 58), நாஜிம் (வயது 30) ஆகியோரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, குற்றவாளிகளை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், குற்றவாளிகளை கைது செய்ய முற்பட்டனர். அப்போது, அதிகாரிகளை தாக்கி குற்றவாளிகள் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.
அச்சமயம் பாதுகாப்பு கருதி நடத்தப்பட்ட என்கவுண்டரில், குற்றவாளி நாஜிமின் கால்களில் குண்டு பாய்ந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். கயவர்களின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.