மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒருநாள் கணவனுடன், மற்றொரு நாள் கள்ளக்காதலனுடன்... முக்கோண காதலால் கணவன் கொடூர கொலை.!
அன்பு கொண்ட கணவனிடம் கள்ளக்காதலனுடன் குடித்தனம் நடத்த வருவேன் என்று கூறியும், அதனை ஏற்றுக்கொண்ட கணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 25). இவரின் கணவர் சிவம் குப்தா (வயது 26). சிவம் பைக் டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 2 வயதுடைய குழந்தையும் இருக்கிறது.
இதனிடையே, பிரியங்காவுக்கு, பலியா மாவட்டத்தை சேர்ந்த கர்ஜன் யாதவ் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளனர். ஒருகட்டத்தில் கள்ளக்காதல் ஜோடி சேர்ந்து வாழ முடிவெடுத்து, கடந்த மார்ச் மாதம் இருவரும் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். கர்ஜன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
ஒருசில மாதங்கள் கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை நடத்திய பிரியங்கா, கணவருக்கு தொடர்பு கொண்டு தான் கள்ளகாதலருடன் இருப்பதை தெரிவித்துள்ளார். மேலும், தான் வீட்டிற்கு வருவதாகவும் கூறிய பெண்மணி, கள்ளகாதலரும் நம்முடன் இருப்பார் என கூறியுள்ளார்.
மனைவியின் மீது கண்மூடித்தனமான அன்பு கொண்ட கணவர், மனைவியின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மூவரும் புதிதாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கின்றனர். அங்கு ஒருநாள் இரவில் கணவர், மற்றொரு நாள் இரவில் கள்ளகாதலர் என பெண் குடித்தனம் நடத்தி இருக்கிறார்.
மனைவி மீது அன்பு வைத்த கணவர் சில நேரம் மனைவியின் செயலில் உள்ள தவறை உணர்த்துவது போல அறிவுரையும் வழங்கி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி, சம்பவத்தன்று உறங்கிக்கொண்டு இருந்த கணவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.
மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில், அதிகாரிகள் தம்பதியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி சம்பவம் அம்பலமானது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், கள்ளக்காதல் ஜோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், மேற்கூறிய அதிர்ச்சி தகவலும் அம்பலமானது. தற்போது பிரியங்கா - சிவம் ஜோடியின் குழந்தை தான் ஆதரவு இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. கள்ளக்காதல் வயப்பட்ட மனைவியை மனதளவில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்ட கணவனை வரனாக பெற்ற மனைவி, அவனின் அன்பை புரிந்துகொள்ளாமல் காம மாயையில் தவித்ததால் நடந்த விபரீதம் கள்ளக்காதல் வயப்படுவோருக்கான பாடம் என்பது குறிப்பிடத்தக்கது.