ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நெஞ்சமே பதறுகிறது.. காளைமாடு மீது மோதி, லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் துள்ளத்துடிக்க உயிரிழப்பு.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
ஆடு-மாடுகளை வளர்ப்போர் தங்களின் கால்நடைகளை வீதியில் அலையவிட்டால், அப்பாவி ஒருவரின் உயிர் காரணமே இன்றி நொடியில் பறிபோகும் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா, படல்பூர் பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, சாலையின் குறுக்கே திடீரென காளை ஒன்று புகுந்தது. இதனை சற்றும் எதிர்பாராத இருசக்கர வாகன ஒட்டி, நிலைதடுமாறி காளையின் மீது வாகனத்தை மோதி கீழே விழுந்தார்.
அச்சமயம், அவருக்கு மிக அருகில் வந்துகொண்டு இருந்த கனரக வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். நிகழ்விடத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.
விபத்தில் சம்பந்தப்பட்ட கனரக லாரி ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இளைஞர் உயிரிழந்த பதைபதைப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ग्रेटर नोएडा का ये वीडियो बहुत ही दर्दनाक है। बुलेट से जा रहा युवक आवारा पशु से टकराकर नीचे गिरा। इसके बाद पीछे से आ रहा ट्रक ने उसे रौंद दिया। जिससे उसकी मौत हो गई। युवक बुलंदशहर अपनी ससुराल से दिल्ली जा रहा था। #Noida #accident @noidapolice @Uppolice pic.twitter.com/uTxQySt2MM
— Vrinda Srivastava (@VrindaSrivasta2) September 30, 2023